நடைபயிற்சியின்போது பொதுமக்கள் பார்த்தனர் மைசூரு பூங்காவில் கிடந்த செல்போன் வெடிகுண்டு
மைசூரு பூங்காவில் நேற்று செல்போன் வெடிகுண்டு ஒன்று கிடந்தது. நடைபயிற்சியின்போது பொதுமக்கள் அதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
மைசூரு,
மைசூரு பூங்காவில் நேற்று செல்போன் வெடிகுண்டு ஒன்று கிடந்தது. நடைபயிற்சியின்போது பொதுமக்கள் அதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை கைப்பற்றி செயலிழக்க செய்தனர்.
நடைபயிற்சி
மைசூரு டவுன் நஜர்பாத் பகுதியில் ‘மக்கள் பூங்கா’ என்ற பெயரில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தினமும் காலையிலும், மாலையிலும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். மேலும் பொதுமக்களும் ஓய்வு நேரங்களில் பூங்காவுக்கு குடும்பத்துடன் வந்து நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்த பூங்காவின் அருகே பஸ் நிலையம், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக பூங்காவுக்கு வந்தனர். அப்போது அங்குள்ள செடிகளுக்கு இடையே சிறிய, சிறிய வயர் துண்டுகள், பேட்டரிகள் கிடந்தன. மேலும் தனியாக ஒரு அட்டைப்பெட்டியும் கிடந்தது.
காவல் கட்டுப்பாட்டு அறை
அதைப்பார்த்த அவர்கள் அங்கு வெடிகுண்டு இருப்பதாக பீதி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுப்பிரமணீஷ்வரர் ராவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதலில் அவர்கள் பூங்காவில் குவிந்திருந்த பொதுமக்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர் அவர்கள் அங்கு கிடந்த வயர் துண்டுகளையும், மர்மமான முறையில் கிடந்த அட்டைப்பெட்டியையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களையும், மோப்ப நாயையும் வரவழைத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் அந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி அதை லாவகமாக திறந்து பார்த்தனர்.
செல்போன் வெடிகுண்டு
அப்போது அதில் 2 செல்போன்கள், வயர்கள் மற்றும் 60 பேட்டரிகளை ஒன்றிணைத்து செல்போன் வெடிகுண்டு தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது. அது ஒரு வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு அந்த அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது எத்தனை மணிக்கு வெடிக்க வேண்டும் என்ற நேரத்தை குறிப்பிடாமல் வைத்திருந்தது தெரியவந்தது. ஒருவேளை நேரத்தை குறிப்பிட்டு வைத்திருந்தால் அந்த வெடிகுண்டு வெடித்திருக்கலாம். அல்லது தற்போது வெடிகுண்டை தயாரித்து வைத்துவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து வந்து நேரத்தை குறித்து வைத்து வெடிக்கச் செய்திருக்கலாம். இல்லையேல் யாரோ மர்ம நபர்கள் பொதுமக்களையோ, அரசையோ அச்சுறுத்துவதற்காக இப்படி வெடிகுண்டை தயாரித்து வைத்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
செயலிழக்க செய்தனர்
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். பின்னர் போலீசார் அந்த வெடிகுண்டையும், அங்கு கிடந்த வயர் துண்டுகளையும் கைப்பற்றினர். இதற்கிடையே மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.
ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார்
இதுகுறித்து நஜர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வெடிகுண்டை அங்கு வைத்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் வெடிகுண்டு பீதி ஏற்பட்டுள்ளதால் மைசூரு மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரெயில் நிலையம், அரண்மனை, பஸ் நிலையங்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
போலீசார் பூங்காவில் சோதனையிடுவதை அறிந்த பொதுமக்கள் அங்கு அதிக அளவில் குவிந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
வெடிகுண்டு நகரமாக மாறி வருகிறது
இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மைசூரு கோர்ட்டில் குண்டு வெடித்தது. அந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு விசாரணை குழுவினர் பயங்கரவாதிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தேசிய புலனாய்வு விசாரணை குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.
அந்த சம்பவத்தை இன்னும் மைசூரு மக்கள் மறக்கவில்லை. அதற்குள் தற்போது மைசூரு டவுனில் உள்ள ஒரு பூங்காவில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மைசூரு மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. கலாசார நகரம் என்று அழைக்கப்பட்டு வந்த நகரம் தற்போது வெடிகுண்டு நகரமாக மாறி வருகிறது என்று பொதுமக்கள் சிலர் வேதனையுடன் கூறினர்.

Related Tags :
Next Story