மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற ஆட்டோ டிரைவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நடத்தையில் சந்தேகம்

மும்பை விக்ரோலி பகுதியை சேர்ந்தவர் சங்கர் பன்சோடே(வயது45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவியின் நடத்தையில் இவருக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர் மனைவியை துன்புறுத்தி வந்தார். கடந்த 2014–ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் போது மனைவியின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்து உள்ளார்.

அப்போது அவரது மகன் தாயை காப்பாற்றி உள்ளான்.

ஜெயில் தண்டனை

இந்த சம்பவம் குறித்து சங்கர் பன்சோடே மீது அவரது மனைவி விக்ரோலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கர் பன்சோடேவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சங்கர் பன்சோடே மனைவியை மண்எண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது குற்றவாளி சங்கர் பன்சோடேவுக்கு நீதிபதி 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story