மும்பை– புனே நெடுஞ்சாலையில் கோர விபத்து 2 கார்கள் மோதி 3 பேர் பலி 7 பேர் படுகாயம்


மும்பை– புனே நெடுஞ்சாலையில் கோர விபத்து 2 கார்கள் மோதி 3 பேர் பலி 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:45 AM IST (Updated: 21 Dec 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

மும்பை– புனே நெடுஞ்சாலையில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

புனே,

மும்பை– புனே நெடுஞ்சாலையில் 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

தறிகெட்ட ஓடிய கார்

மும்பையில் இருந்து நேற்று காலை சொகுசு கார் ஒன்று ராய்காட் மாவட்டம் காபோலி கேளிக்கை பூங்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கார் காலை 10 மணியளவில் மும்பை– புனே விரைவுச்சாலையில் காலாப்பூர் பகுதியில் சென்றபோது, அதன் டயர் திடீரென வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.

மேலும், சாலையின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மறுபக்க சாலையில் கார் பாய்ந்தது. இதில், அந்த வழியாக புனேயில் இருந்து மும்பை நோக்கி வந்த மற்றொரு கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்தன. இரு கார்களிலும் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

3 பேர் பலி

விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

மற்ற 7 பேர் சிகிச்சைக்காக நவிமும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பலியானவர்களின் பெயர் அஸ்மித் தாவடே (வயது 19), சுபம் போராடே (19) மற்றும் ஆனந்த் நரேந்திர பரேக் (55) என்பது தெரியவந்தது.

காலை நேரத்தில் நடந்த இந்த விபத்தின் காரணமாக மும்பை– புனே நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story