சுசீந்திரத்தில் விபத்து டெம்போக்கள் மோதல்; டிரைவர் பலி மற்றொருவர் படுகாயம்
சுசீந்திரத்தில் டெம்போக்கள் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு டிரைவர் படுகாயம் அடைந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவிலில் இருந்து பாறைபொடி ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ நேற்று காலை அஞ்சுகிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டெம்போவை புத்தேரி பாறையடியை சேர்ந்த மகேஷ்பாபு (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார். சுசீந்திரம் ஆணைப்பாலம் ரெயில்வே பாலத்தில் சென்ற போது, எதிரே மற்றொரு டெம்போ அஞ்சுகிராமத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி பாறைப்பொடி ஏற்றி வந்தது. அந்த டெம்போவை கீழமறவன் குடியிருப்பை சேர்ந்த லிங்கேஸ்வரன் (31) என்பவர் ஓட்டினார்.
இந்தநிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே பாலத்தில் 2 டெம்போக்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன. மேலும், டெம்போக்களில் இருந்த இரண்டு டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர்.
உடனே, அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்பாபு பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த லிங்கேஸ்வரன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தினால், நாகர்கோவில்–சுசீந்திரம் சாலையில் 45 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மீட்பு வாகனங்கள் மூலம் சாலையில் கிடந்த டெம்போக்களை அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து அந்த வழியாக போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story