செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் விசாரணை முருகனும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்
வேலூர் மத்திய சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் நேற்று முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் 2 ஜெயில் வார்டன்கள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வேலூர்,
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய அறையில் கடந்த மார்ச் மாதம் செல்போன், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வருகிறது. வழக்குவிசாரணையின் போது முருகன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். இந்த வழக்கு விசாரணை நேற்று மாஜிஸ்திரேட்டு அலீசியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதனால் முருகன் வேலூர் மத்தியசிறையில் இருந்து துணைபோலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில் போலீஸ் காவலுடன் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வேலூர் மத்தியசிறையில் பணிபுரியும் வார்டன்கள் நந்தக்குமார், பெருமாள் ஆகியோரிடமும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்குவிசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 2-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் முருகன் மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

Related Tags :
Next Story