பிரபல ரவுடி கொலை வழக்கில் பசுபதி பாண்டியனின் மைத்துனர் ஓசூர் கோர்ட்டில் சரண்
மேட்டூர் பிரபல ரவுடி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பசுபதி பாண்டியனின் மைத்துனரான வக்கீல் ஸ்டாலின் ஜெயக்குமார் ஓசூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.
ஓசூர்,
சேலம் மாவட்டம் மேட்டூர் ஆர்.எஸ். பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 45). பிரபல ரவுடி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முரளி (42) என்பவரும் கடந்த 19-ந் தேதி மேட்டூர் காவேரி கிராஸ் பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு காரில் வந்த மர்ம கும்பல் 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அமிர்தராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். முரளி படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் ரவுடி கொலையில் தொடர்புடைய கூலிப்படையான தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (30), நடராஜன் (24), மாரிசெல்வம் (19), வேல்முருகன் (21) பாரதிராஜா (24), கருப்பசாமி (32) ஆகிய 6 பேரை போலீசார் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே நடந்த வாகன சோதனையில் பிடித்து கைது செய்தனர். இதில் அமிர்தராஜை வெட்டும் போது கைவிரலில் காயம் ஏற்பட்டதால் கருப்பசாமியை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். மற்ற 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரவுடி அமிர்தராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக போலீசார் தேடி வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் ஜெயக்குமார் (40) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜே.எம்.2 கோர்ட்டில் நேற்று காலை மாஜிஸ்திரேட்டு சாந்தி முன்னிலையில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரை வருகிற 26-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து ஸ்டாலின் ஜெயக்குமாரை போலீசார் வேனில் சேலம் அழைத்து சென்றனர். அங்கு மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
தற்போது சரண் அடைந்துள்ள ஸ்டாலின் ஜெயக்குமார் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக போலீசாரால் சேர்க்கப்பட்டவர் ஆவார். வக்கீலான அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியனின் மனைவி ஜெசிந்தா பாண்டியனின் தம்பி ஆவார்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் மேட்டூர் மின்நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் வீட்டை விற்பனை செய்வதற்கான பவர் ஆப் அட்டர்னியை ஸ்டாலின் ஜெயக்குமார் பெற்ற விவகாரம் தொடர்பாக ரவுடி அமிர்தராஜ் கூலிப்படை உதவியுடன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story