உடைந்த பாலம் சீரமைக்கப்பட்டது: மாஞ்சோலைக்கு 2 நாட்களுக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது
உடைந்த பாலம் சீரமைக்கப்பட்டதால், 2 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் மாஞ்சோலைக்கு போக்குவரத்து தொடங்கியது. மாஞ்சோலை வனப்பகுதி நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பசுமைப்பகுதி மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட
அம்பாசமுத்திரம்,
உடைந்த பாலம் சீரமைக்கப்பட்டதால், 2 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் மாஞ்சோலைக்கு போக்குவரத்து தொடங்கியது.
மாஞ்சோலை வனப்பகுதிநெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பசுமைப்பகுதி மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு, சுமார் 2 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரை சேர்த்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பாலம் உடைந்ததுதேயிலைத் தோட்டத்திற்கு செல்ல மணிமுத்தாறு அணை கரை வழியாக மலை சாலை சுமார் 35 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது. இதில் சுமார் 25 கி.மீ தூர சாலை தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளது. இந்த நிலையில் மாஞ்சோலை வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து 4 ஆண்டுகளாக சாலையைப் பராமரிக்கவும், செப்பனிடவும் வனத்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் மலைச்சாலை மற்றும் அதில் அமைந்துள்ள பாலங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் உள்ளன.
இந்த நிலையில், தொடர் மழையால் சாலை மற்றும் யானைக்கல் ஓடையில் அமைந்துள்ள மாஞ்சோலை 3–ம் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.
போக்குவரத்து பாதிப்புஇதையடுத்து, கடந்த 2 நாட்களாக தேயிலைத் தோட்டத்திற்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரேசன் கடைக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், தொழிலாளர்கள் ரேசன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர். மேலும் ஆம்புலன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், உடைந்த பாலத்தை தோட்ட நிர்வாகம் சார்பில், மேற்பார்வையாளர் கணேசன் தலைமையில் தொழிலாளர்கள் நேற்று மாலையில் சீரமைத்தனர். இதை தொடர்ந்து 2 நாட்களுக்கு பிறகு, நேற்று மாலை 6 மணி முதல் அந்த பாலம் வழியாக தேயிலை தோட்ட வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது.