2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை: தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை வரவேற்று தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தர்மபுரி,
2ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் கனிமொழி எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்று தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தர்மபுரி நகரில் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமையில் கட்சி நிர்வாகிகள் தர்மபுரி 4 ரோடு, ஆறுமுக ஆசாரிதெரு, பிடமனேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் நிர்வாகிகள் காவேரி, தங்கமணி, லட்சுமணன், ராஜா, தென்னரசு, அண்ணாதுரை, காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன் தலைமையில் மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் சந்திரமோகன், கட்சி நிர்வாகிகள் பஸ் நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இண்டூர்-நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் இண்டூரில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் வைகுந்தம், ஒன்றிய துணை செயலாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன், ஊராட்சி செயலாளர் முனுசாமி, நிர்வாகிகள் சரவணன், குமார், ராஜகோபால், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, தொப்பூர், லளிகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி நிர்வாகிகள் ஆறுமுகம், நடராஜன், வீரமணி, ரங்கநாதன், மஞ்சுநாத், பழனி, அதியமான், சின்னபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரிமங்கலம்
இதேபோல் காரிமங்கலத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்குமார் தலைமையில் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், கட்சி நிர்வாகிகள் கணேசன், வெங்கடாசலபதி மற்றும் பலர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல் ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட அவைத்தலைவர் மாதையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Related Tags :
Next Story