நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பாபநாசத்தில் 25 மில்லி மீட்டர் மழை பதிவு
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பாபநாசம் அணை பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பாபநாசம் அணை பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பரவலாக மழைநெல்லை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று நெல்லையில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மாலை 3.15 மணி அளவில் லேசான மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதிக பட்சமாக பாபநாசம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழை பதிவானது.
அணைகள் நீர்மட்டம்பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 580 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அணை பகுதியில் பெய்த மழையால் நேற்று தண்ணீர் வரத்து வினாடிக்கு 1,642 கன அடியாக அதிகரித்தது. இந்த அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 134.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் கீழ் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 113.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 490 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதுதவிர கடனாநதி அணையின் நீர்மட்டம் 82.60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாகவும், கருப்பநதி அணை நீர்மட்டம் 65.77 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 48.75 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 18.53 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணை நிரம்பி தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை அளவுநெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டர்) வருமாறு:–
பாபநாசம் –25, சேர்வலாறு –5, மணிமுத்தாறு –4, கடனாநதி –2, ராமநதி –2, அம்பை –2, ஆய்குடி –2, சேரன்மாதேவி –2, பாளையங்கோட்டை –1.