இரட்டை ஆயுள்தண்டனை பெற்றவருக்கு உறவினரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிப்பு
இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவருக்கு, உறவினரை கொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லாக்கவுண்டர். இவரது மகன் புட்டன் என்கிற அர்த்தனாரி(வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் பெற்றோருடன் தகராறு செய்து வந்தார். அதை பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான சரவணன்(45) என்பவர் தட்டிக்கேட்டதுடன், அவரது சண்டையை தடுத்து வந்தார். இது அர்த்தனாரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கடந்த 14.3.2014 அன்று பகலில் அர்த்தனாரி மதுபோதையில் தனது பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டார். அங்கு வந்த சரவணன், தகராறை தட்டிக்கேட்டதுடன் அவரை அடித்து காயப்படுத்தினார். இது அர்த்தனாரிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
அன்று இரவு சரவணன் வீட்டில் நன்றாக அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அர்த்தனாரி, கட்டிலில் படுத்திருந்த சரவணனை சூரிகத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். பின்னர் அவரை தோளில் தூக்கி கொண்டு இருளில் வெளியேறினார்.
பின்னர் கொலையுண்ட சரவணன் உடலை வீட்டின் அருகில் உள்ள தண்ணியில்லா கிணற்றில் போட்டு புதைத்தார். இது குறித்த புகாரின் பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்த்தனாரியை கைது செய்தனர்.
இவர் மீதான வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார்.
சரவணனை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இ.பி.கோ.302 பிரிவின்கீழ் உள்ள கொலை குற்றத்துக்கு அர்த்தனாரிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.1000 அபராதமும், 449 பிரிவின்கீழ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1000 அபராதமும், 201 பிரிவின்கீழ் கொலை செய்து உடலை மறைத்த குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.ஸ்ரீதரன் தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற புட்டன் என்ற அர்த்தனாரி, தனது அண்ணன் பழனிசாமியுடன் சேர்ந்து ஏற்கனவே எடப்பாடியை அடுத்த இருப்பாளிபுதூர் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அண்ணாதுரை (45), அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி மணி (55). ஆகிய 2 பேரை கடந்த ஆண்டு(2016) ஜனவரி மாதம் 17-ந் தேதி சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து, வரப்பில் அறுக்கப்பட்ட 2 பனைமரங்களின் வேர்பகுதியை துளையிட்டு புதைத்து வைத்தவர் ஆவார்.
ஏற்கனவே, சரவணன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அர்த்தனாரிக்கு எதிராக, அண்ணாதுரை, மணி ஆகியோர் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். அதற்கு பழிவாங்கும் வகையில் அண்ணாதுரை, மணி ஆகியோரை அர்த்தனாரியும், அவரது அண்ணன் பழனிசாமியும் சேர்ந்து கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை வழக்கில் கடந்த 30.11.2017 அன்று சேலம் 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் அர்த்தனாரிக்கும், பழனிசாமிக்கும் இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் நடந்த சரவணன் கொலை வழக்கில், தற்போதுதான் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நேற்று ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story