பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பழனி கிரிவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:45 AM IST (Updated: 22 Dec 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

பழனி கிரிவீதியில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பழனி,

சபரிமலை சீசன் தொடங்கியதையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அடிவாரம் மற்றும் கிரிவீதியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதையொட்டி கிரிவீதியை சுற்றிலும் ஆக்கிரமித்து கடைகள், ஓட்டல்கள் அமைக்கப்பட்டன.

இது தவிர பைகளில் விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் கிரிவீதியில் முகாமிட தொடங்கினர். இதனால் கிரிவீதியில் நடந்து செல்லும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, தாசில்தார் ராஜேந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் ஆகியோர் மேற்பார்வையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் வருவது குறித்து தகவலறிந்த வியாபாரிகள் பலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். மற்ற இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க கிரிவீதியை சுற்றிலும் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் கிரிவீதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story