வளசரவாக்கத்தில் வீடு புகுந்து மடிக்கணினி திருடிய பெண் கைது
வளசரவாக்கத்தில் பகுதிகளில் வீடு புகுந்து மடிக்கணினி திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ராமாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களிடம் நடைபெறும் திருட்டு குறித்து வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமாபுரம் அருகே கையில் மடிக்கணினியுடன் சந்தேகத்துக்கு இடமாக நடந்து சென்ற ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், வேலூரை சேர்ந்த சாய்னா பானு(வயது 36) என்பதும், வளசரவாக்கம், ராமாபுரம் பகுதியில் திறந்து கிடக்கும் வீடுகள் மற்றும் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து நகை, செல்போன்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றை திருடி வந்ததும் தெரிந்தது. சாய்னா பானுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story