2ஜி வழக்கில் ஆ.ராசா– கனிமொழி விடுதலை தூத்துக்குடி– ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


2ஜி வழக்கில் ஆ.ராசா– கனிமொழி விடுதலை தூத்துக்குடி– ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2017 3:00 AM IST (Updated: 22 Dec 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, தூத்துக்குடி– ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

தூத்துக்குடி,

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, தூத்துக்குடி– ஓட்டப்பிடாரம் பகுதிகளில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

தூத்துக்குடி

டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் மீதான 2ஜி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், ராஜ்மோகன் செல்வின், அனந்தையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பில், தேரடி திடல் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சண்முகையா தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ஆரோக்கிய ரவி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லதா கருணாநிதி, ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் ராஜ், ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் செல்வராஜ், ரவீந்திர குமார், ஒன்றிய ஆதிதிராவிட அணி அமைப்பாளர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் குறுக்குசாலை பஸ் நிலையம் முன்பு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொண்டர் அணி அமைப்பாளர் மேகலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story