100 நாள் வேலை வழங்க கோரி 3 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
உப்பிலியபுரம் ஒன்றியத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள ஒக்கரை கிராமத்தை சேர்ந்த 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆகியோர் நேற்று காலை துறையூர் - தம்மம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.அதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒக்கரை பிரிவு ரோட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எ.பழனிச்சாமி தலைமையிலும், மாராடியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒன்றியக்குழு செயலாளர் முத்துக்குமார் தலைமையிலும், எரகுடி கிராமத்தில் துறையூர்-புளியஞ்சோலை சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.
இது குறித்து தகவல் அறிந்த துறையூர் தாசில்தார் சந்திரகுமார், மண்டல துணைத் தாசில்தார் மோகன், வருவாய் அதிகாரிகள் பிரேமா, ஜாபர்சாதிக் மற்றும் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கண்ணன், ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய மேற்பார்வையாளர் பரமேஸ்வரி மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள், ஒக்கரை பிரிவு ரோட்டில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, ஒக்கரை, மாராடி, எரகுடி ஊராட்சிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டம் நிறைவேற்ற அனுமதி பெறப்பட்ட வேலைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டு, பணியின் அடிப்படையில் அதற்கு தேவையானவர்களுக்கு வேலை வழங்கப்படும். மேலும், தொடர்ந்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்க திருச்சி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
சாலை மறியலால் ஒக்கரை பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் அளித்த உறுதிமொழி குறித்து மாராடி மற்றும் எரகுடி ஆகிய 2 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தியவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களும் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story