2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:30 AM IST (Updated: 22 Dec 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை செய்யப்பட்டதையடுத்து தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

வண்டலூர்,

2ஜி வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகியோரை நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி விடுதலை செய்தார். இதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் பொறுப்பாளர் ஜி.கே.லோகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி. கார்த்திக், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் கே.பி.ஜார்ஜ், காதர்பாய், டி.சதீஷ்குமார், தசரதன், ராமமூர்த்தி, ரவி, பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல மறைமலைநகரில் நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில் தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் பாலாஜி தலைமையில் தி.மு.க.வக்கீல்களான திருமுருகன், தம்பிரான், சந்திரன், லோகநாதன், மகேஷ் உள்ளிட்ட பலர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கினார்கள்.

அச்சரப்பாக்கம்

அச்சரப்பாக்கத்தில் காஞ்சீபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எழிலரசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோகுல கண்ணன், பேரூர் செயலாளர் உஷேன் மற்றும் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். சித்தாமூர் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் ஏழுமலை தலைமையிலும் இடைக்கழிநாடு பேரூர் செயலாளர் இனியரசு தலைமையில் கடப்பாகத்திலும் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

குன்றத்தூர்

காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஆலந்தூர் எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் குன்றத்தூர் பஸ் நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். இதில் குன்றத்தூர் பேரூர் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் விசுவநாதன் தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள். இதில் நகர நிர்வாகிகள் பி.சண்முகானந்தன், பாட்சாபெருமாள், பிரேம்விசுவநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story