6 கூரைவீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ரூ. 6 லட்சம் பொருட்கள் சேதம்
ராஜகிரியில் 6 கூரைவீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதில் ரூ. 6 லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது.
பாபநாசம்,
பாபநாசம் தாலுகா ராஜகிரி ஊராட்சியில் செக்கடி தெருவில் வசித்து வருபவர் சரவணன் (வயது 40). சலவைத்தொழிலாளி. அதே தெருவை சேர்ந்த மும்தாஜ்பேகம் (50), மாதவன் (38), கல்யாணி(46), விஜயா(46), கதிஜாஅம்மாள்(56). இவர்கள் 6 பேரும் கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென்று ஏற்பட்ட மின்கசிவினால் 6 கூரைவீடுகளும் தீ பிடித்து எரிந்தது. மேலும் 2 சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தீப்பிடித்ததில் வீடுகளிலிருந்த பிரிட்ஜ், டிவி, பீரோ, கட்டில், மளிகை பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ. 6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆறுதல்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும், கும்பகோணம் தீயணைப்பு நிலைய தலைமை காவலர் இளங்கோவன் தலைமையிலும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, பாபநாசம் தாசில்தார் வெங்கடாசலம், துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் பிராங்க்ளின், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் , சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story