பனிச்சரிவில் சிக்கி பலியான மூர்த்தியின் உடலை மீட்பதில் தாமதம் 24 ராணுவ வீரர்கள் இன்று கொசூர் வருவதாக தகவல்


பனிச்சரிவில் சிக்கி பலியான மூர்த்தியின் உடலை மீட்பதில் தாமதம் 24 ராணுவ வீரர்கள் இன்று கொசூர் வருவதாக தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 9–ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது.

தோகைமலை,

ஜம்மு காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அங்கு பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 9–ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லையோரம் பக்தூரில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரரான கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் பக்கம் நாச்சிகளத்துப்பட்டியை சேர்ந்த மூர்த்தி (வயது 33) உள்பட 5 பேர் சிக்கினர். பனிச்சரிவில் சிக்கிய மூர்த்தியை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவரை பிணமாக மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர். மூர்த்தி பலியானது குறித்து ராணுவ அதிகாரிகள், அவரது மனைவி தமிழரசிக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் அங்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால் நேற்று மூர்த்தியின் உடல் இருக்கும் இடத்தின் அருகே ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை. இதனால் மூர்த்தியின் உடலை மீட்டு ராணுவ முகாமிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில் மூர்த்தியின் உடலை அடக்கம் செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) கோவை ராணுவ முகாமில் இருந்து 24 ராணுவ வீரர்கள் மற்றும் 3 உயர் அதிகாரிகள் கொசூர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொசூர் பகுதியில் மூர்த்தியின் உருவப்படத்தை சுவரொட்டியாக ஆங்காங்கே ஒட்டி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Next Story