திசையன்விளையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு தனி பணியாளர் நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


திசையன்விளையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு தனி பணியாளர் நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2017 2:30 AM IST (Updated: 23 Dec 2017 12:07 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு தனி பணியாளர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தட்கல் டிக்கெட் வழங்க தாமதம் நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் உள்ளது. திசையன்விளை ம

திசையன்விளை,

திசையன்விளையில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு தனி பணியாளர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தட்கல் டிக்கெட் வழங்க தாமதம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை தபால் நிலையத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் உள்ளது. திசையன்விளை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் இந்த முன்பதிவு மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ரெயில் பயணத்தை பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். இங்குள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில், தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மூலமாக ரெயில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

விடுமுறை காலம் என்பதால் தட்கல் டிக்கெட் பதிவு செய்ய தினசரி அதிகமானவர்கள் வருகிறார்கள். அதிகாலையில் வந்து தபால் நிலையத்தில் காத்து இருக்கிறார்கள். ஆனால் டிக்கெட் பதிவு செய்ய (விரைவாக) அனுபவம் பெற்ற பணியாளர்கள் தபால் நிலையத்தில் இல்லை. இதனால் தட்கல் டிக்கெட் வழங்க கால தாமதம் ஆகிறது. சில நாட்களில் ஒருவருக்கு கூட தட்கல் டிக்கெட் வழங்க முடியவில்லை.

நியமிக்க கோரிக்கை

நேற்று தட்கல் டிக்கெட் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை. அதிகாலையில் இருந்து தட்கல் டிக்கெட்டுக்காக காத்து இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே பயணிகளின் நலன் கருதி ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்துக்கு அனுபவம் உள்ள தனி பணியாளர் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story