நெல்லையில், 10–ந்தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் மனுக்கள் அனுப்ப வேண்டுகோள்
நெல்லையில் வருகிற 10–ந்தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. குறைகள் தொடர்பாக மனுக்கள் அனுப்பலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லையில் வருகிற 10–ந்தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. குறைகள் தொடர்பாக மனுக்கள் அனுப்பலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
மனுக்கள் அனுப்பலாம்நெல்லை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில், நெல்லை மண்டல ஆணையாளர் சனத்குமார் தலைமையில், ‘‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’’ என்ற குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 10–ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் தீர்க்கப்படாமல் குறைகள் இருந்தால் அதுதொடர்பாக மனு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மனுக்களை ‘‘மண்டல ஆணையாளர், வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்.ஜி.ஓ. ‘பி’ காலனி, திருநெல்வேலி –7’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மனுவின் மேல் ‘‘வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில்’’ என்று குறிப்பிட்டு, வருகிற 3–ந்தேதிக்குள் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
கூட்ட நேரம்அதைத்தொடர்ந்து 10–ந்தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை உறுப்பினர்களுக்கும், மாலை 3 மணி முதல் 4 மணி வரை தொழில் அதிபர்களுக்கும், 4 மணி முதல் 5 மணி வரை வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அப்போது மனு அனுப்பியவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்துக்கு வந்து மண்டல ஆணையாளரை சந்தித்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு உதவி ஆணையாளர் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.