காஞ்சீபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


காஞ்சீபுரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x
தினத்தந்தி 23 Dec 2017 3:15 AM IST (Updated: 23 Dec 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தை அடுத்த சித்தாத்தூரில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த சித்தாத்தூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 53). இவர் குடும்பத்தினருடன் வீட்டில்  தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து கோதண்டராமன் மாகரல் போலீசில் புகார் செய்தார். காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மேற்பார்வையில் மாகரல் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் யோவான் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார். 

Next Story