இரும்பு பட்டறையில் மின்திருட்டு உரிமையாளருக்கு ரூ.1.66 லட்சம் அபராதம்
பொன்னேரி பகுதியில் மின் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரி பகுதியில் மின்சார வாரிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சைனாவரம் கிராமத்தில் உள்ள இரும்பு பட்டறை ஒன்றில் மின் திருட்டு நடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பொன்னேரி கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் கூறுகையில், ‘இரும்பு பட்டறையில் மின் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதன் உரிமையாளர் முரளிக்கு ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story