பாலாறு-பொருந்தலாறு, பரப்பலாறு அணைகளில் தண்ணீர் திறப்பு
பழனி பாலாறு-பொருந்தலாறு, பரப்பலாறு அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு மலர் தூவி தண்ணீரை திறந்துவிட்டார்.
பழனி,
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பாலாறு-பொருந்தலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 65 அடி ஆகும். கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக அணையின் தற்போதைய நீர்மட்டம் 61.65 அடியாக உள்ளது. நீர்மட்டம் 55 அடியை தாண்டிவிட்டதால் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என பழனி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து டிசம்பர் 22-ந்தேதி (அதாவது நேற்று) முதல் அணையின் இடது பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு முடிவு செய்தது.
அதன்படி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அணையின் மதகு பகுதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மலர் தூவி அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் டி.ஜி.வினய், சப்-கலெக்டர் அருண்ராஜ், தாசில்தார் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன், வனச்சரகர் கணேஷ்ராம், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய தலைவர் ஏ.டி.செல்லச்சாமி, நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விவசாய பாசனத்துக்காக அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் நாட்கள் முடிவு செய்யப்படும்.
தற்போது இடது பிரதான கால்வாயில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் பெரியம்மாபட்டி, இரவிமங்கலம், தாதநாயக்கன்பட்டி, நெய்க்காரப்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, மானூர் உள்பட 16 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனர்.
இதேபோல், ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணையில் தற்போது 85.87 அடி வரை தண்ணீர் உள்ளது. இதையடுத்து நேற்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு மலர் தூவி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், ஒட்டன்சத்திரம் வனச்சரகர் செந்தில்குமார், அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் பாலசுப்பிரமணி, நகர கழக செயலாளர் உதயம்ராமசாமி, பழனி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் மெய்யழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் ஒட்டன்சத்திரம் தாலுகா மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 323 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க மறுப்பு தெரிவித்த அமைச்சர், செய்தி குறித்து தெரிவிப்பதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவை சேர்ந்தவர்கள் அணை திறப்பு குறித்த விவரங்களை தங்களுக்கு தருவார்கள் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

Related Tags :
Next Story