கோமதேஸ்வரர் கோவில் மகாமஸ்தகாபிஷேக விழாவில் 35 லட்சம் பேர் பங்கேற்பார்கள் மந்திரி ஏ.மஞ்சு தகவல்


கோமதேஸ்வரர் கோவில் மகாமஸ்தகாபிஷேக விழாவில் 35 லட்சம் பேர் பங்கேற்பார்கள் மந்திரி ஏ.மஞ்சு தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2017 2:30 AM IST (Updated: 23 Dec 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

கோமதேஸ்வரர் கோவில் மகாமஸ்தகாபிஷேக விழாவில் 35 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று மந்திரி ஏ.மஞ்சு கூறினார்.

பெங்களூரு,

கோமதேஸ்வரர் கோவில் மகாமஸ்தகாபிஷேக விழாவில் 35 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று மந்திரி ஏ.மஞ்சு கூறினார்.

கர்நாடக கால்நடைத்துறை மந்திரி ஏ.மஞ்சு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பசு மேளா

ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடுவில் பசு மேளா ஜனவரி மாதம் 4–ந் தேதி தொடங்கி 6–ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 7 வகையான இந்திய நாட்டு பசுக்கள், 2 வகையான வெளிநாட்டு பசுக்கள், 9 வகையான ஆடுகள், 4 வகையான எருமை மாடுகள், 5 வகையான உள்நாட்டு கோழிகள், வாத்துகள் பல்வேறு வகையான கால்நடைகள் இந்த மேளாவில் இடம் பெறும். தேவைப்பட்டால் மேளாவை ஒரு நாள் நீட்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். இந்த மேளாவை முதல்–மந்திரி சித்தராமையா தொடங்கி வைக்கிறார்.

விவசாயிகளுக்கு புதிய வகையான பசு மாடுகளை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் இந்த மேளா நடத்தப்படுகிறது. பால் தொழில் மூலம் விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். பால் விற்பனை மூலம் விவசாயிகளுக்கு வாரந்தோறும் பணம் கிடைக்கிறது. ஆடுகள், கோழிகள் அவர்களுக்கு ஏ.டி.எம். எந்திரங்களை போன்றவை ஆகும். இவற்றை எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்து பணம் பார்க்கலாம்.

துணை நகரங்கள்

சரவணபெலகொலாவில் உள்ள கோமதேஸ்வரர் கோவிலில் பிப்ரவரி 7–ந் தேதி தொடங்கி 15–ந் தேதி வரை மகாமஸ்தகாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 487 ஏக்கர் பரப்பளவில் துணை நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு வரும் பக்தர்கள் தங்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ரூ.80 கோடியில் இணைப்பு சாலைகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹாசனுக்கு சிறப்பு ரெயில் வசதிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விழாவில் 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆன்மிக, கலை நிகழ்ச்சிகளுக்கு ரூ.75 கோடி செலவாகும். இதற்கு நிதி உதவு செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.

656 டாக்டர்கள் நியமனம்

மத்திய அரசு நிதி உதவி வழங்காவிட்டால் முழு செலவையும் கர்நாடக அரசே ஏற்றுக்கொள்ளும். கால்நடை மருத்துவமனைகளில் புதிதாக 656 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 126 பேர் ஐதராபாத்–கர்நாடகா பகுதியை சேர்ந்தவர்கள். அதனால் மாநிலத்தில் கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை.

ஹாசன், குண்டலுபேட்டை, யாதகிரி ஆகிய பகுதிகளில் புதிதாக கால்நடை டிப்ளமோ கல்லூரிகளை தொடங்கப்படுகிறது. வருகிற கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏ.மஞ்சு கூறினார்.


Next Story