மனைவி பிரிந்து சென்றதால் வேதனை: தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த வெல்டிங்பட்டறை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கிரி (வயது35). இவர் தஞ்சை மானம்புச்சாவடி சின்ன ஆஸ்பத்திரி அருகே வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகாரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சுதா, கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்த கிரி மிகவும் வேதனையுடன் காணப்பட்டார். மேலும் அவருக்கு கடன் பிரச்சினையும் இருந்து வந்தது.
இதனால் மனமுடைந்த கிரி தனது வெல்டிங்பட்டறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story