அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு
சுசீந்திரத்தில் நடைபாதையில் அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
சுசீந்திரம் கணியன்விளையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 34), கொத்தனார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவர் செல்லும் நடைபாதையில் ஒரு மின் கம்பி அறுந்து கிடந்தது. இதைப் பார்த்த சுரேஷ் மின் கம்பியால் யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த மின் கம்பியை ஒரு கம்பால் தூக்கி அப்புறப்படுத்த முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பி சுரேஷ் மீதே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story