மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை


மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை
x
தினத்தந்தி 23 Dec 2017 4:06 AM IST (Updated: 23 Dec 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

அரசு எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

புதுச்சேரி,

புதுவை–தமிழக கடலோர பகுதியில் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் புதுச்சேரி அவசரகால செயல் மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை யொட்டி புதுவையில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம், கடலுக்குள் மீன்பிடித்து கொண்டு இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று புதுவை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனர் வின்சென்ட்ராயர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து புதுவையில் உள்ள மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வில்லை. அவர்கள் தங்கள் படகுகளை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையே கடலோர காவல்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் உத்தரவின் பேரில் உதவி சப்–இன்ஸ்பெக்டர் கொண்டா பாலாஜி ராவ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்களிடம் கடலில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story