உணவிடும் விவசாயிகளை உயர்வடைய செய்வோம்
இந்திய திருநாடு மிகப்பெரிய விவசாய நாடு. இங்கே, மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாய தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுகிறார்கள்.
வல்லரசு நாடான அமெரிக்க அரசே விவசாயிகளை ஊக்குவித்து, தேவையான மானியங்களை வழங்கி, அந்நாட்டுக்கு தேவையான உணவுப்பொருட்கள் முழுமையும் அந்நாட்டிலேயே விளைவித்துக்கொள்கிறது. உற்பத்தி முழுமைக்கும் அரசே முழு பொறுப்பேற்றுள்ளது. காரணம், உணவு தேவைக்கு விவசாயிகளை மட்டுமே அரசு பெரிதும் நம்பி உள்ளது.
ஆனால் இந்தியாவோ உணவு பொருட்கள் தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்கிறது. நமது நாட்டில் வேளாண் துறையில் சுயசார்பு கொள்கை இல்லாதது வேதனையளிக்கிறது. அரசின் கொள்கை முடிவுகள் சிறு, குறு விவசாயிகளுக்கு பயனளிக்காததாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 29 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை புதிய பாசன திட்டங்களை உருவாக்கி சாகுபடி நிலங்களாக மாற்றுவதற்கு நபார்டு மூலம் நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.
ஆனால் நடைமுறையில் இருக்கும் பாசன கட்டமைப்புகளே முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அணைகள், ஏரிகள், ஆறுகள், கண்மாய்கள் தூர்வாரப்படுவதில்லை. மாநிலங்களுக்கு இடையேயான நீராதார பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. விளை நிலங்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கவில்லை. சாலைகள், அலுவலக கட்டிடங்கள், கல்லூரிகள் என்று விளைநிலைங்களையும், நீர்ஆதாரங்களையும் அபகரித்து அரசே கட்டிடங்கள் கட்டுவதால் பாசன, வடிகால் பிரச்சினைகள் ஏற்பட்டு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 15 சதவீதம் விளைநிலைங்கள் குறைந்துவிட்டதாக கூறும் புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
மேலும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் மறுக்கப்படுகிறது. கடன் மற்றும் நிவாரணம் வழங்குவதில் சரியான கொள்கை திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இவற்றுக்கு தீர்வு ஏற்படும் வகையில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஏற்று அமல்படுத்துவதாக கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் பாரதீய ஜனதா கட்சி உறுதியளித்தது. ஆனால் இதுவரை அமல்படுத்தவில்லை. இதனால் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் தொடர்கதையாகிவிட்டன. இதுதொடர்பாக, பஞ்சாப் விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு, அந்த அறிக்கையை கொள்கை அளவில் ஏற்க மாட்டோம் என மறுத்து விட்டது.
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு அரசால் விலை நிர்ணயம் செய்ய இயலாது என்றும் கைவிரித்து விட்டது. உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3½ லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதை சுட்டிக்காட்டி கடனை தள்ளுபடி செய்ய கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் கட்சி பாகுபாடின்றி எம்.பி.க்கள் வலியுறுத்தியபோது, கடனை தள்ளுபடி செய்ய முடியாது என கொள்கை முடிவெடுத்துள்ளதாக அரசு எழுத்து பூர்வமாக தெரிவித்தது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே வேளையில், பெருநிறுவனங்கள் பெற்ற கடன் பல லட்சம் கோடி கடன் நிலுவையை வராக்கடனாக அறிவித்து சலுகை அளிக்க முயற்சிக்கிறது.
இதே போல, நாட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து குறைவான விலையில் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுகிறதே தவிர, 80 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோவது குறித்து கவலைகொள்வதில்லை. உலக பெரும் நிறுவனங்கள் உணவு பொருட்களை நகரங்கள்தோறும் ‘மால்’ என்கிற பெயரில் பெரிய கடைகளை திறந்து விற்பனை செய்துகொள்ள அனுமதித்ததால், உற்பத்தியும், பொருளாதாரமும், விவசாய சந்தைகளும் முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக சந்தை பொருளாதாரத்தோடு நாம் போட்டியிட முடியாத நிலையில், உற்பத்தி செலவு உயர்ந்துள்ள நிலையில் அரசு உள் நோக்கத்தோடு உற்பத்தியாளர் குழு என்ற பெயரில் விவசாயிகளே உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முயற்சிக்கிறது. இதனால் உள்நாட்டு சிறு, குறு வணிகர்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகளில் தொழில் வளர்ச்சியை விட விவசாய வளர்ச்சி தான் லாபகரமான, நம்பிக்கையான தொழில் என்கிற நிலை மாறி வருவதால், இந்திய நாட்டிலும் வேளாண் தொழில் வளர்ச்சி பெறும் என்கிற நம்பிக்கையில் படித்த இளைஞர்களும், மனித உழைப்பு சுரண்டப்படுவதை உணர்ந்த பெருநிறுவனங்களில் பணிபுரிவோரும் வாழ்வதற்கு நம்பிக்கையான தொழில் விவசாயம்தான் என விளை நிலங்களை மீட்பதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருவது விவசாயிகளுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது.
உணவிடும் விவசாயிகளை உயர்வடைய செய்யும் வகையில், ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோம். வேளாண் பொருளாதாரம் தான் உலக பொருளாதாரம் என்பதை நிரூபிக்கவும் சபதம் ஏற்போம். விவசாயிகள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்.
இன்று (டிசம்பர் 23) தேசிய விவசாயிகள் தினம்.
பி.ஆர்.பாண்டியன், தலைவர், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு

Related Tags :
Next Story