அற்புத ‘ஆப்’!
தேவையான நபர்களுக்குக் கை கொடுக்கும் கருவியாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நிரூபித்து வருகிறார்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், 21 வயது ஹர்ஷ் சொங்ரா.
ஹர்ஷ் சொங்ரா உருவாக்கியிருக்கும் செயலி (ஆப்), பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏதும் இருக்கின்றனவா என்று கண்டுபிடிக்க உதவுகிறது.
ஹர்ஷ் சொங்ராவே மனம்- உடல் ரீதியான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டவர் என்பதால், அவரால் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உளப்பூர்வமாக உணர்ந்து செயல்பட முடிந்திருக் கிறது.
“நான், மூளை- உடல் உறுப்புகள் ஒருங்கிணைப்புக் குறைபாட்டினால் (‘டிஸ் பிராக்சியா’) பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிவதற்கே எனது பெற்றோருக்கு ஒன்பதாண்டுகள் பிடித்தன” என்கிறார் சொங்ரா. இந்த நரம்பியல் சார்ந்த பிரச்சினையால் இவரது உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்பட்டது, கல்வி கற்பது மட்டுமின்றி, சாதாரண வேலைகளை செய்வதற்குக் கூட இவர் கடுமையாகத் தடுமாற வேண்டியிருந்தது.
ஆனால் உடல்ரீதியான இந்தப் பிரச்சினையையும் தாண்டி சொங்ரா போராடி கல்வியில் வளர்ந்தார், கம்ப்யூட்டர் விளையாட்டுகள் விளையாடினார், கணினி அறிவை வளர்த்துக்கொண்டார்.
இன்னும்கூட சொங்ரா இந்த நரம்பியல் குறைபாட்டுப் பிடியில் இருந்து முற்றிலுமாக விடுபட்டுவிடவில்லை.
“இப்போதும் எனக்கு ‘டிஸ்பிராக்சியா’ அறிகுறிகள் இருக்கின்றன. இன்னும் என் கைகள் அதிகம் நடுங்குகின்றன, என்னால் விரைவாக ஷூ லேசை முடிச்சிடவோ, சட்டை பட்டன்களை போட்டுக்கொள்ளவோ முடிவதில்லை.”
ஹர்ஷ் இப்படிச் சொன்னாலும் இன்று சொந்தமாக ஒரு கணினி நிறுவனத்தை நடத்துகிறார், 14 புரோகிராமிங் லாங்வேஜ்களை அறிந்திருக்கிறார்.
தனது நரம்பியல் குறைபாட்டைச் சரிசெய்ய நீண்டகால சிகிச்சைப் போராட்டம் நடத்திய அனுபவத்தில், ‘மைசைல்டு’ என்ற செயலியை சொங்ரா உருவாக்கியிருக் கிறார். இது, தங்கள் குழந்தைகளுக்கு மன நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பெற்றோர் ஆரம்பத்திலேயே அறிவதற்கு உதவுகிறது.
“எனக்கு இருந்த குறைபாட்டை அறிவதற்கு எனது பெற்றோருக்கு ஒன்பதாண்டுகள் ஆகின என்று கூறினேன். ஆனால் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், தங்கள் குழந்தைக்கு ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்று ஒரு பெற்றோரால் 45 வினாடிகளுக்குள் அறிந்துவிட முடியும். ஒரு புத்திசாலித்தனமான ‘அல்காரிதம்’ அடிப்படையிலானது இந்தச் செயலி” என்று கூறி வியப்பூட்டுகிறார்.
பல்வேறு முதலீட்டாளர்கள், நல்மனம் கொண்டவர்களால் வழங்கப்பட்ட 65 லட்ச ரூபாயால் இச்செயலியையும், ‘வி இன்குளூடட்’ என்ற தகவல் தளத்தையும் ஹர்ஷ் உருவாக்கியிருக்கிறார். இந்தத் தளம், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மருத்துவ, சிகிச்சை தகவல்களை வழங்குவது மட்டு மின்றி, அவர்கள்பால் மற்றவர்களை அக் கறை கொள்ளவும் வைக்கிறது.
‘மைசைல்டு’ ஆப் சுமார் 140 நாடுகளில் 14 ஆயிரம் முறை பதிவிறக்கம் செய்யப் பட்டிருக்கிறது என்றால், ‘வி இன்குளூடட்’ தளம் மாதந்தோறும் 2 லட்சம் பேரை எட்டுகிறது. இதில், ‘டிஸ்பிராக்சியா என்றால் என்ன?’ என்பது போன்ற அடிப்படையான விஷயங்களை வீடியோ வாயிலாக எளிமையாக விளக்குகிறார், ஹர்ஷ் சொங்ரா. பிரபல ஆலிவுட் நடிகர் டேனியல் ராட்கிளிப் கூட இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்தான் என்பது போன்று இவர் கூறும் கூடுதல் தகவல்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை மருந்தாகின்றன.
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் (சி.ஓ.ஓ.) ஷெரில் சாண்ட்பர்க், தனது ‘பிளாக்’கில் ஹர்ஷ் சொங்ரா பற்றிக் குறிப்பிட்டிருப்பது, அவருக்கும், நமக்கும் பெருமையளிக்கும் விஷயம்.

Related Tags :
Next Story