புதிய ஆண்டுக்கான அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நிறம்


புதிய ஆண்டுக்கான அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நிறம்
x
தினத்தந்தி 23 Dec 2017 1:30 PM IST (Updated: 23 Dec 2017 12:23 PM IST)
t-max-icont-min-icon

2018-ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ நிறமாக ‘பர்பிள்’ எனப்படும் ஊதா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘பேண்டோன்’ என்ற அமைப்பின் சார்பில் இவ்வாறு ஊதா நிறம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ‘பேண்டோன்’ நிறுவனம் இயங்கி வருகிறது. வண்ணங்கள் சம்பந்தமான நிறைய ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. வண்ணத்துக்குத் தேவைப்படும் பல்வேறு பொருட்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் அதிகாரப்பூர்வமான நிறத்தை அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2010-ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.

ஓர் ஆண்டுக்கான நிறத்தை தேர்ந்தெடுப்பதற்காக உலகில் இருக்கும் முக்கியமான நாடுகள் அனைத்தில் இருந்தும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள். அவர் களின் சந்திப்பு யாருக்கும் தெரியாத இடத்தில் ரகசியமாக நடைபெறும். மேலும் யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்பதும் ரகசியமாக வைக்கப்படும். பின் டிசம்பர் மாதத்தில், நிறத்தைத் தேர்வு செய்துவிட்டு அறிவிப்பை வெளியிடுவார்கள்.

அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நிறமாக ஊதாவை அந்த நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது. செல்வ வளத்தைக் குறிக்கும் என்பதாலும், வருகிற ஆண்டு அதிக செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த நிறம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ நிறமாக பச்சை நிறம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. இந்த நிறம் உலகில் மாசுபாட்டின் அளவை குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. மேலும் பச்சை நிறம் புதிய தொடக்கத்தை குறிக்கும் என்பதாலும் அந்த நிறம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.

Next Story