காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம்


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 29 Dec 2017 10:53 PM GMT (Updated: 2017-12-30T04:22:54+05:30)

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கர்நாடகத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பெங்களூரு,

 ஜனவரி 20–ந் தேதி முதல் 3 நாட்கள் அவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராகுல் காந்தி பதவி ஏற்றுள்ளார். தலைவராக பொறுப்பேற்ற பிறகு கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் முதல் சுற்றுப்பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் 20–ந் தேதி தொடங்கி அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

பெலகாவி, பல்லாரி உள்பட சில மாவட்டங்களில் நடைபெறும் கட்சி மாநாடுகளிலும், நிர்வாகிகளுடனான கூட்டங்களிலும் அவர் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கட்சி நிர்வாகிகளுடனும் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி, அரசியல் வியூகங்களை வகுக்கவும் திட்டமிட்டு உள்ளார். கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2018) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்திற்கு அச்சாரம் போடும் வகையில் அவரது இந்த சுற்றுப்பயணம் அமையும்.

Next Story