பழங்கால யானையின் எலும்புக்கூடு ரூ. 4 கோடிக்கு ஏலம்!


பழங்கால யானையின் எலும்புக்கூடு ரூ. 4 கோடிக்கு ஏலம்!
x
தினத்தந்தி 30 Dec 2017 6:10 AM GMT (Updated: 2017-12-30T11:40:15+05:30)

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத யானை ஒன்றின் எலும்புக்கூடு ரூ. 4 கோடிக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘மேமத்’ எனப்படும் யானைகள் வாழ்ந்தன. ராட்சத உருவத்துடன், நீண்ட, வளைந்த தந்தங்களையும் கொண்ட அந்த யானைகள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அழிந்துவிட்டன. தற்போது ‘மேமத்’ இனம் உலகில் இல்லை.

அத்தகைய இன யானையின் முழு உடல் அமைப்புடன் கூடிய எலும்புக்கூடு, பிரான்சின் லியான் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.

அந்த எலும்புக்கூடு 5 லட்சத்து 48 ஆயிரத்து 250 யூரோவுக்கு (ரூ. 4.13 கோடி) ஏலம் போனது. பிரெஞ்சு பொட்டார் புரூப்பிங் கம்பெனி என்ற நிறுவனம் இதை ஏலம் எடுத்தது. இது அக்கம்பெனியின் அடையாளச் சின்னமாக ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது எலும்புக்கூடாக உள்ள இந்த மேமத் யானை உயிருடன் இருந்தபோது 1400 கிலோ எடையுடன் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மண்ணில் புதைந்துகிடந்த இந்த எலும்புக்கூடு 10 ஆண்டுகளுக்கு முன்பு சைபீரியாவில் தோண்டி எடுக்கப்பட்டது. வேட்டைக்காரர் ஒருவர் இதை பத்திரமாகப் பாதுகாத்துவந்தார்.

மேமத் யானை இறந்தாலும் பல கோடி ரூபாய்! 

Next Story