தென்காசியில் பெண் தீக்குளித்து தற்கொலை இறந்துபோன கணவரின் சேம நலநிதி பங்கு வைப்பதில் தகராறு


தென்காசியில் பெண் தீக்குளித்து தற்கொலை இறந்துபோன கணவரின் சேம நலநிதி பங்கு வைப்பதில் தகராறு
x
தினத்தந்தி 30 Dec 2017 8:30 PM GMT (Updated: 30 Dec 2017 12:39 PM GMT)

இறந்து போன கணவரின் சேம நலநிதி பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி,

இறந்து போன கணவரின் சேம நலநிதி பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பங்கு வைப்பதில் தகராறு

நெல்லை மாவட்டம் தென்காசி கீழ பாறையடி தெருவை சேர்ந்தவர் பிச்சையா. இவர் தென்காசி நகரசபை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து, ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். மூத்த மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு சுப்பம்மாள் என்பவரை பிச்சையா 2–வதாக திருமணம் செய்து கொண்டார். மூத்த மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களை சுப்பம்மாள் வளர்த்து வந்தார்.

இந்தநிலையில் பிச்சையா இறந்து போனதால் அவருக்கு சேர வேண்டிய அரசு சேம நல நிதி வந்துள்ளது. இதனை பங்கு வைப்பதில் மூத்த மனைவியின் குழந்தைகளுக்கும், சுப்பம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் சுப்பமாளுக்கு நீரிழிவு நோய் வெகுவாக பாதித்திருந்தது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த சுப்பம்மாள், இரவில் தூங்க சென்றவர் மண்எண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டு படுத்துவிட்டார். அவர் கூச்சலும் போடவில்லை. காலையில் அவர் படுத்திருந்த அறையில் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் திறந்து பார்த்த போது சுப்பம்மாள் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து தென்காசி போலீசில், சுப்பம்மாளின் அண்ணன் மணி புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுப்பமாளின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story