தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வார்டு சீரமைப்பில் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்


தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வார்டு சீரமைப்பில் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்  கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 30 Dec 2017 8:45 PM GMT (Updated: 30 Dec 2017 1:33 PM GMT)

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வார்டு சீரமைப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை தெரிவிக்கலாம் என்று தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வார்டு சீரமைப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதனை தெரிவிக்கலாம் என்று தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

வார்டு சீரமைப்பு

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக தமிழக தேர்தல் ஆணையம், வார்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டு புதிதாக அமைக்கப்பட இருக்கும் வார்டு எல்கை விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி வார்டுகள், ஒன்றியக்குழு வார்டுகள், பேரூராட்சி வார்டுகள், நகராட்சி வார்டுகள் மாவட்ட ஊராட்சி வார்டுகள், மாநகராட்சி வார்டுகள் என எல்கை பிரிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். மேலும் பிரிக்கப்பட்ட வார்டுகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் வருகிற 2.1.2018 அன்றுக்குள் தெரிவித்திட கேட்டு கொண்டுள்ளார்.

குறைபாடுகள்

அதன்படி தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி, ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் தற்போது சீரமைக்கப்பட்டதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகள் உடனடியாக எழுத்து பூர்வமாக மாவட்ட கழகத்திற்கு தெரியப்படுத்துங்கள். இது மாவட்ட கலெக்டரிடம் எடுத்து சொல்லி மறு சீரமைக்க வசதியாக இருக்கும்.

எனவே மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் மற்றும் ஊராட்சி கழக செயலாளர்கள் இதில் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட குறைகளை வருகிற 2.1.2018 அன்றுக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story