கடனை திருப்பி கேட்ட உறவினர் மீது தாக்குதல்: பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் மீது வழக்கு

கடனை திருப்பி கேட்ட உறவினர் மீது தாக்குதல்: பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Dec 2017 8:30 PM GMT (Updated: 30 Dec 2017 1:39 PM GMT)

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட உறவினரை தாக்கியதாக பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி,

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட உறவினரை தாக்கியதாக பள்ளி ஆசிரியை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.10½ லட்சம் கடன்

தூத்துக்குடி அண்ணாநகர் 3–வது தெருவை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மனைவி இந்திரா ராணி. இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது உறவினரான தூத்துக்குடி மேல சண்முகபுரத்தை சேர்ந்த ராஜவேல் (வயது 38) என்பவரிடம் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினாராம். ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு

சம்பவத்தன்று ராஜவேல், இந்திரா ராணியிடம் பணத்தை கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இந்திரா ராணி, அவருடைய மகன் விக்னேஷ், உறவினர் கன்னியம்மாள் ஆகியோர் சேர்ந்து ராஜவேலை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், இந்திரா ராணி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story