விருதுநகர் அருகே வேன் கவிழ்ந்து 29 பேர் படுகாயம்


விருதுநகர் அருகே வேன் கவிழ்ந்து 29 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Dec 2017 9:15 PM GMT (Updated: 2017-12-30T23:50:04+05:30)

விருதுநகர் அருகே உள்ள மலைப்பட்டிக்கு மதுரையில் இருந்து ஒரு வேனில் 28 பேர் வந்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள மலைப்பட்டிக்கு மதுரையில் இருந்து ஒரு வேனில் 28 பேர் வந்தனர். இந்த வேனை குமார்(வயது 33) என்பவர் ஓட்டி வந்தார். மலைப்பட்டியில் துக்க நிகழ்ச்சிக்கு வந்து விட்டு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்த போது சென்னல்குடி அருகே திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது. வேன் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 29 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் 12 பேர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலும், 8 பேர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியிலும், 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி சூலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story