5 நாட்களாக லாரிகளுக்கு மணல் வழங்காததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை


5 நாட்களாக லாரிகளுக்கு மணல் வழங்காததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 30 Dec 2017 7:01 PM GMT)

5 நாட்களாக லாரிகளுக்கு மணல் வழங்காததால் பொதுப்பணித்துறை அலுவலகத்தை டிரைவர்கள் முற்றுகை

சிப்காட் (ராணிப்பேட்டை),

ஆற்காடு அருகே சக்கரமல்லூரில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் லாரிகளுக்கு இங்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஆன்லைனில் பதிவு செய்த 300–க்கும் அதிகமான லாரிகளுக்கு கடந்த 5 நாட்களாக மணல் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மணல் லாரி டிரைவர்கள் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள், ஆன்லைனில் பதிவு செய்த தங்களுக்கு காலதாமதமின்றி மணல் வழங்க வேண்டும், அரசு மணல் குவாரியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு வந்து மணல் லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story