குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் வசதி செய்து தரக்கோரி கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி ஊராட்சியில் தெக்கிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மின் மோட்டார் பழுதானதால் குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று வயலுக்கு பாய்ச்சும் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கடும் அவதி அடைந்த ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி செய்து தரக்கோரி நேற்று காலிக்குடங்களுடன் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெக்கப்பட்டி கிராமத்தில் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு உள்ளிட்ட எந்தஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என கோஷங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகம், சதாசிவம் ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மின் மோட்டார் சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story