அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; போக்குவரத்து ஸ்தம்பித்தது


அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; போக்குவரத்து ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-31T02:46:26+05:30)

ராயக்கோட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது உத்தனப்பள்ளி. இங்கிருந்து கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக வளைவில் நேற்று வந்த போது, எதிர்பாராதவிதமாக லாரி, முன்னால் சென்ற டாரஸ் லாரி மீது மோதியது.

மோதிய வேகத்தில் கிரானைட் லாரி எதிரே வந்த கார் மீது மோதியது. அந்த நேரம் காரின் பின்னால் வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியும் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் ஒரே இடத்தில் மோதிக் கொண்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விபத்தில் வாகனங்களின் டிரைவர் களுக்கு லேசான காயம் ஏற் பட்டது. இதன் காரணமாக ராயக்கோட்டை-பாலக்கோடு சாலையில் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங் கள் அணிவகுத்து நின்றன.

போலீசார் விரைந்தனர்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story