குடும்பத்தகராறு வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத்தகராறு வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Dec 2017 12:24 AM GMT (Updated: 2017-12-31T05:54:22+05:30)

குடும்பத்தகராறு காரணமாக வெல்டிங் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஆயக்குளத்தூர் கிராமப்பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 26). வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் ரோஹித் (5) என்ற மகனும் உள்ளனர். இவர் மது குடிக்கும் பழக்கம் உடையவர்.

கடந்த 3 மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெளியில் சென்ற அவர் திரும்பி வந்தபோது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு வந்த அவர் அதே ஊரில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் மாடிக்கு செல்லும் படிகட்டு கைப்பிடி கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொன்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story