நள்ளிரவு கலகலப்பும்... சுவாரசியமும்...


நள்ளிரவு கலகலப்பும்... சுவாரசியமும்...
x
தினத்தந்தி 31 Dec 2017 6:35 AM GMT (Updated: 2017-12-31T12:05:35+05:30)

2018-ம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டன. வெளியிடங்களுக்கு சென்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன்தான் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்றில்லை.

2018-ம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டன. வெளியிடங்களுக்கு சென்று ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன்தான் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே அதே உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...

2017-ம் ஆண்டு, குடும்ப உறவுகளில் அழகான நினைவுகள் இருக்கும். புதிதாக திருமணம் நடந்திருக்கும். குழந்தைகள் பிறந்திருக்கும். இப்படி குடும்ப உறவுகளில் கிடைத்த அத்தனை நினைவுகளையும், அவை சார்ந்த புகைப்படங்களையும் புரட்டி பார்த்து மகிழலாம். அத்துடன் 2017-ம் ஆண்டில் நடந்த சுவாரசிய நினைவுகளை வைத்து குடும்பத்தில் விளையாட்டு போட்டி களையும் நடத்தலாம்.

புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி யிருப்பவர்கள் சுற்றம் சூழ ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கொண்டாடலாம்.

பிடித்தமான திரைப்படங்களை தேர்ந் தெடுத்து பாருங்கள். ஏனெனில் புத்தாண்டை வீட்டில் கொண்டாட நினைப்பவர்களுக்கு திரைப்படங்கள் சிறந்த பொழுதுபோக்காக அமையும்.

2017-ம் ஆண்டில் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், அதை சமாளித்த விதத்தையும் நினைத்து, உங்களை நீங்களே வலுப்படுத்தவேண்டும். கணவனும் மனைவியும் வேலைக்கு செல்லும் குடும்பமாக இருந்தால், அவர்களது பணியில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

திருமணமாகாத இளம் வயதினர் என்றால்..., நண்பர்கள், தோழிகளுடன் வீட்டில் பார்டி கொண்டாடலாம். ஒரே மாதிரியான உடையில் நண்பர்கள், தோழி களுடன் மகிழ்ச்சியாக புத்தாண்டை வரவேற்கலாம்.

வீட்டின் மொட்டை மாடியில் இரவு உணவு விருந்திற்கு ஏற்பாடு செய்யலாம். மேலும் நண்பர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதாக இருப்பின் மொட்டை மாடியில் பெரிய டி.வி. வைத்து புத்தாண்டை கொண்டாடலாம்.

மனைவி மீதான உங்களுடைய அன்பை வெளிகாட்ட கணவர்மார்களுக்கு சிறப்பான தருணம் இது. ஏனெனில் வருடத்தின் கடைசி நாளின், கடைசி உணவை நீங்கள் சமைத்து, மனைவியை அசத்தலாம். பிரான்ஸ் நாட்டில் இதை ஒரு புத்தாண்டு சடங்காகவே கடைப்பிடிக் கிறார்கள்.

மறக்காமல் கேமரா ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். மனைவியின் செல்லச் சண்டை, குட்டி சுட்டிகளின் சேட்டை, தோழிகளின் அரட்டை, நண்பர்களின் கலாட்டா என புத்தாண்டு கொண்டாட்டத்தை படம் பிடித்து, புத்தாண்டு முழுவதும் காண்பியுங்கள்.

புத்தாண்டு நெருங்கியதும் ஒருவிதமான பழக்கம் தொற்றிக்கொள்ளும். அதுதான் ‘நியூ இயர் ரெசலூஷன்’. அதாவது, இந்த ஆண்டு செய்த தவறை அடுத்த ஆண்டு செய்ய மாட்டேன் என உறுதிமொழி எடுப்பது. இப்படி புத்தாண்டு அன்று எடுக்கும் உறுதி மொழியை சிலர் சில நாட்களில் மறந்து போய்விடுவார்கள். ஆதலால் அத்தகைய உறுதிமொழிகளை நண்பர்களோடு இணைந்து எடுக்கவேண்டும். அதிலும் குறிப்பாக புத்தாண்டின் முதல் நிமிடத்தில் ஏற்கவேண்டும்.

வீட்டையும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். எப்படி தெரியுமா..? மெழுகுவர்த்தி விளக்குகளால் வீட்டை அலங்கரித்து, நள்ளிரவை, மெல்லிய ஒளியால் அழகுப்படுத்துங்கள். குறிப்பாக புதுமண தம்பதிகளுக்கான அலங்கரிப்பு முறை இது.

பள்ளிக்கூட நண்பர்கள், கல்லூரி நண்பர்களை புத்தாண்டு கொண்டாட்டங் களுக்கு அழைத்திருந்தால், பழைய கால பாடல்களை பதிவேற்றம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு சிறப்பு அனுபவங்கள் ஒளிந்திருக்கும். அதை பாடல்கள் நினைவு படுத்தும்.

சாக்லேட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்தை குஷிப்படுத்தும். டீன் ஏஜ் வயதினருக்கான சிறப்பு கொண்டாட்டம் இது. இதை அமெரிக்கர்கள் கடைப் பிடிக்கிறார்கள். வருடத்தின் கடைசி வாரத்திலிருந்தே சாக்லேட்டுகளை சேகரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படி சேகரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் புத்தாண்டு நள்ளிரவில் சுவைக்கப்படும்.

12 சாக்லேட்டுகள், 12 ஐஸ்கிரீம்கள், 12 கேக்குகள்... என தின்பண்டங்களை 12 என்ற எண்ணிக்கையிலேயே சேகரித்து குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சுவைக்கலாம்.

டென்மார்க் நாட்டில் ஒரு விநோத பழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கடிகாரம் 12 மணியை தொட்டவுடன், நாற்காலியில் அமர்ந்தபடி 12 முறை துள்ளி குதிக்கிறார்கள். அதற்கு முன்பாக குடும்பத்தோடு நாற்காலியில் அமர்ந்திருக்கவேண்டுமாம். குடும்பத்துடன் நாற்காலியில் அமர்வதும், 12 மணி அடித்தவுடன் துள்ளி குதிப்பதும், தனி ஆனந்தம் தானே..!

நம்முடைய செல்போன், கேமராக்களில் பதிவான போட்டோ, வீடியோக்களை தொகுத்து 2017-ம் ஆண்டில் கிடைத்த அனுபவங்களை வீடியோ தொகுப்பாக பார்க்கலாம். இந்த சிறப்பு காட்சியில் நண்பர்கள், குடும்பத்தினரை அழைத்து புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கலாம்.

பலூன்களில் ஹீலியம் வாயுக்களை நிரப்பி, வருங்கால ஆசைகளை எழுதி பறக்கவிடலாம்.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக பிரத்தியேக தொப்பிகளையும், கண்ணாடி களையும் வடிவமைத்து நண்பர்களுடன் அணிந்து மகிழலாம்.

‘விடை கொடு 2017’, ‘விரைந்து வா.. 2018’, ‘உனக்கான காத்திருக்கிறேன் 2018’... போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பிடித்துக்கொண்டு விதவிதமாக போட்டோ எடுத்து, பேஸ்புக்கில் பதிவேற்றலாம். தனியாக போட்டோ எடுப்பதாக இருந்தாலும் சரி, நண்பர் களோடு எடுப்பதாக இருந்தாலும் சரி...! புத்தாண்டை வரவேற்கும் வகையில் போட்டோ காட்சிகள் அமையவேண்டும்.

நண்பர்களை வட்டமாக நிற்க சொல்லி, கை கோர்த்துக்கொண்டு செல்பி எடுத்து, ‘ஹாட் டிரண்டிங்கை’ உருவாக்கலாம். இது ஒரு வருடத்துடன் முடி வடையாது. எல்லா வருட பிறப்பிற்கும் நண்பர்களை அழைத்து, போஸ் மாறாமல்... ஒரே மாதிரியில் புகைப்படம் எடுங்கள். அப்போது புகைப்படத்தின் புதுப்புது அப்டேட் கிடைக்கும்.

புத்தாண்டு பிறப்பதற்குள் குறிப்பிட்ட புதையலை கண்டுபிடிக்கவேண்டும் என்பது போன்ற போட்டிகளை நடத்தலாம். இதன்மூலம் புத்தாண்டு நள்ளிரவு கலகலப்பாகவும், சுவாரசியமாகவும் நகரும்.

Next Story