டி.டி.வி.தினகரனிடம் உள்ள 18 பேர் தான் ‘சிலீப்பர்செல்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


டி.டி.வி.தினகரனிடம் உள்ள 18 பேர் தான் ‘சிலீப்பர்செல்கள்’ ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2017 11:00 PM GMT (Updated: 2018-01-01T03:18:02+05:30)

திண்டுக்கல்லில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.

திண்டுக்கல்,

தி.மு.க. ஆட்சி என்றாலே சுயநலம், துரோகம், சூது, பொய் தான் இருக்கும். இரட்டை இலை சின்னத்தை தோற்கடிக்க துரோகிகளுடன் மறைமுகமாக கூட்டு வைத்த அவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

பணம், ஒரு கழுதையை குதிரையாகவும், பூனையை புலியாகவும் காட்டும். அ.தி.மு.க. ஒரு ஆறு போலவும், தொண்டர்கள் தென்றல் காற்று போலவும் உள்ளனர். துரும்பு போல இருக்கும் ஒருவர் (டி.டி.வி.தினகரன்) தனது ஆணவ பேச்சால் ஆறு, காற்றின் சேவையை தடுக்க நினைக்கிறார். விரைவில் அவர் ஆற்றில் மூழ்கி காணாமல் போவார்.

அ.தி.மு.க.வில் ‘சிலீப்பர்செல்கள்’ உள்ளதாகவும், 3 மாதங்களில் ஆட்சி கலைந்துவிடும் என்றும் டி.டி.வி.தினகரன் பேசி வருகிறார். அவரிடம் உள்ள 18 பேர் தான் ‘சிலீப்பர்செல்கள்’. சோதனைகளை எல்லாம் மக்களின் துணையோடு சாதனையாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story