சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2018 3:30 AM IST (Updated: 1 Jan 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

ஈரோடு,

மீண்டும் பழங்குடி (டி.என்.டி.) சான்றிதழ் வேண்டும். மீண்டும் இலவச உயர் கல்வி வேண்டும். சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும். சீர்மரபினர் நலவாரிய திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் தனி இடஒதுக்கீடு வேண்டும்.

ரெங்கி கமி‌ஷனின் 76 பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். ஈஷ்வரஐயா கமி‌ஷனரின் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும். பிகுராம்ஜி கமி‌ஷனின் இடைக்கால பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்மரபினர் நலச்சஙக்ம் சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அப்பாச்சிக்கவுண்டர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் புஞ்சைபுளியம்பட்டியில் மாநில தலைவர் முனுசாமி கவுண்டர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


Next Story