10 ஆடுகளை கடித்து கொன்ற ஓநாய் கூட்டம்


10 ஆடுகளை கடித்து கொன்ற ஓநாய் கூட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:45 PM GMT (Updated: 2018-01-01T03:55:38+05:30)

கோவில்பட்டி அருகே 10 ஆடுகளை கடித்து கொன்ற ஓநாய் கூட்டத்தை வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள தோணுகால் கிராமம் கிழக்கு தெரு காலனியை சேர்ந்தவர் குருசாமி(வயது 44). விவசாயி. இவர் 60 செம்மறி ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தார். வழக்கமாக அவர் தனது ஆடுகளை, வீட்டுக்கு அருகில் உள்ள தன் விவசாய இடத்தில் கிடை அமைத்து அதில் அடைத்து வைத்திருப்பார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், அந்த ஆட்டு கிடையில் ஆடுகளை அடைத்து விட்டு இரவு 11 மணிக்கு பின்னர் குருசாமி வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை 5 மணிக்கு குருசாமி ஆட்டு கிடைக்கு வந்து பார்த்தார். அப்போது 10 ஆடுகள் இறந்து கிடந்தன. மற்றும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம் அடைந்த நிலையில் இருந்தன. இதுகுறித்து அவர் வில்லிச்சேரி கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார். டாக்டர் செல்வி தலைமையில் வந்த மருத்துவ குழுவினர் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தனர். அப்போது மிருகம் தாக்கி அந்த ஆடுகள் பலியானது தெரிய வந்தது. பின்னர் காயம் அடைந்த மற்ற ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

தோணுகால் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் இருந்து ஓநாய்கள் கூட்டம் வந்து அந்த ஆடுகளை கடித்த கொன்றதாக அந்த பகுதி மக்கள் தெரி வித்தனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க வனத்துறை யினர் துரித நடவடிக்கை எடுத்து மலைப்பகுதி யில் உள்ள ஓநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி னார்.

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என விவசாயி முனியசாமி தெரிவித்தார். 

Next Story