அனுமதியின்றி மணல், சவடு மண் அள்ளினால் புகார் செய்யலாம் கலெக்டர் தகவல்


அனுமதியின்றி மணல், சவடு மண் அள்ளினால் புகார் செய்யலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Jan 2018 3:30 AM IST (Updated: 1 Jan 2018 11:52 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி ஆற்று மணல், சவடு மண் அள்ளினால் புகார் செய்யலாம் என்று கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறு, கண்மாய், மலைப் பகுதிகளில் மணல், கிராவல், சவடு மண் மற்றும் கனிம வளங்களை அரசின் அனுமதியின்றி அள்ளி எடுத்துச் செல்வதை தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளது.

இது தவிர சிவகங்கை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக ஆற்று மணல், சவடு மண், கிராவல் மற்றும் கனிம வளங்களை எடுத்துச் செல்லும் நபர் குறித்தும், வாகனங்கள் குறித்தும் அந்தந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக 86086–00100 என்ற செல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு இது குறித்து புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Next Story