வேலூர் டாஸ்மாக் மண்டலத்தில் உரிமத்தை புதுப்பிக்காததால் 4 மதுபான பார்களுக்கு ‘சீல்’


வேலூர் டாஸ்மாக் மண்டலத்தில் உரிமத்தை புதுப்பிக்காததால் 4 மதுபான பார்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 2 Jan 2018 4:00 AM IST (Updated: 2 Jan 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் டாஸ்மாக் மண்டலத்தில் உரிமத்தை புதுப்பிக்காததால் 4 மதுபான பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் என 2 மண்டலங்களாக பிரித்து டாஸ்மாக் இயங்கி வருகிறது. வேலூர் மண்டலத்தில் 110 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளையொட்டி 5 மதுபான பார்கள் இயங்கி வந்தன.

இந்த நிலையில் மதுபான பார் உரிமத்தொகையை டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் தொகையில் 50–க்கு 3 என்ற வீதத்தில் வசூலிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் அவர்கள் இதனை வலியுறுத்தி டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய டெண்டரை புறக்கணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினத்தோடு மதுபான பார்களின் உரிமம் முடிவடைந்தது.

வேலூர் டாஸ்மாக் மண்டலத்தில் உள்ள 5 மதுபான பார்களில் ஒரே ஒரு மதுபான பாரின் உரிமம் மட்டுமே புதுப்பிக்கப்பட்டிருந்தது. வேலூர் தாலுகாவில் உள்ள 2 மதுபான பார்கள், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள 2 மதுபான பார்கள் என 4 மதுபான பார்களின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து உரிமத்தை புதுப்பிக்காத 4 மதுபான பார்களும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story