புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்


புதுவையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:45 PM GMT (Updated: 2018-01-02T02:02:13+05:30)

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இந்திராநகர் தொகுதி கூட்டம் ராகவேந்திரா திருமண நிலையத்தில் நடந்ததது.

புதுச்சேரி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இந்திராநகர் தொகுதி கூட்டம் ராகவேந்திரா திருமண நிலையத்தில் நடந்ததது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன், கல்யாணி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் தேசியக்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், துணை செயலாளர் ராமமூர்த்தி, விவசாய சங்க மாநில செயலாளர் கீதநாதன், மாநிலக்குழு உறுப்பினர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவை அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். முத்திரையர்பாளையத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆயி குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத நிலை உள்ளது. நவீன கருவிகள், உயிர்காக்கும் கருவிகள் வாங்கவும், சிறந்த மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக முடித்து அனைத்து தெருக்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story