இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செல்போனில் தொல்லை கொடுத்தவர் பற்றி போலீசார் விசாரணை


இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செல்போனில் தொல்லை கொடுத்தவர் பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Jan 2018 10:15 PM GMT (Updated: 2018-01-02T02:59:31+05:30)

தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தவர் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடியை அடுத்துள்ள முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தை சேர்ந்த கணேசவேல் மனைவி சத்தியகலா (வயது 28). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணேசவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்தியகலா தன்னுடைய குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சத்தியகலாவின் செல்போன் எண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான ஆண் ஒருவர் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்தியகலா, நேற்று முன்தினம் இரவு தனது தாயாரிடம் சொல்லி அழுதுள்ளார். அதன்பிறகு இரவு அனைவரும் தூங்கி விட்டனர்.

தற்கொலை

நேற்று காலையில் எழுந்து பார்த்த போது சத்தியகலா, வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சத்தியகலாவின் தாயார் சந்திரபுஷ்பம் கதறி அழுதார்.

தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார், சத்தியகலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெசிமேனகா வழக்குப்பதிவு செய்து, சத்தியகலாவுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்தவர் பற்றி விசாரணை நடத்தினார். 

Next Story