ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர்கள் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2018 4:15 AM IST (Updated: 2 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் வர்த்தகர்கள் கடைகளில் கருப்புக்கொடிஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் நாடு முழுவதும் வர்த்தகர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் ஆன்லைன் வணிகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜி.எஸ்.டி வரி, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றுக்கு எதிர்்ப்பு தெரிவித்து வர்த்தக சங்கங்களின் சார்பில் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் பஸ்நிலையம் அருகில் உள்ள கடைகளில் வத்தகர்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விஜயபுரம் வர்்த்தக சங்க தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஜி.எஸ்.டி வரி, ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

Next Story