தானேயில் மாணவியை கற்பழித்த காவலாளி கைது
தானேயில் மாணவியை கற்பழித்த காவலாளி கைது செய்யப்பட்டார்.
தானே,
தானே, டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் 12–ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு கடந்த ஜூலை மாதம் சான்பாடா பகுதியை சேர்ந்த காவலாளி சஞ்சய் (வயது32) என்பவர் அறிமுகமானார். இதில், சஞ்சய் மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.
அப்போது, அவர் மாணவியை ஆபாசமாக படம் எடுத்து உள்ளார். பின்னர் அந்த படத்தை இணைய தளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டி மாணவியிடம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.
ஆனால் மாணவி அவருக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பினார். இதைப்பற்றி அறிந்து மாணவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் கற்பழிப்பு, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவலாளி சஞ்சயை கைது செய்தனர்.