சுமித் முல்லிக் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம்


சுமித் முல்லிக் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம்
x
தினத்தந்தி 2 Jan 2018 4:30 AM IST (Updated: 2 Jan 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய தலைமை செயலாளர் சுமித் முல்லிக் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநில தலைமை தகவல் ஆணையராக இருந்து வந்தவர் ரத்னாகர் கெய்க்வாட். இவரது பதவி காலம் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. அதன் பிறகு அந்த பதவிக்கு யாரும் நியமனம் செய்யப்படவில்லை.

இதையடுத்து மாநில தகவல் ஆணையரை நியமிக்க பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் மாநில தலைமை தகவல் ஆணையராக, மாநில தலைமை செயலாளர் சுமித் முல்லிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை செயலாளர் சுமித் முல்லிக்கை விட சுமார் 12 மூத்த அதிகாரிகள் மாநில நிர்வாக பணியில் உள்ளனர். எனினும் முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சுமித் முல்லிக்கையே தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.


Next Story